என் தாய்மடி
பெண்ணாட்சி செய்ததாலோ
மருமகனை மன்னனாக்கியதாலோ
கடவுள் ஆனாலும் குற்றம்
தட்டி கேட்கப்பட்டதாலோ
மன்னன் ஆனாலும்
மனுநீதிச் செய்ததாலோ
தூங்காநகரம் ஆனதாலோ
கிராமிய மணம் மாறாததாலோ
நித்திய திருவிழா நகரம் ஆனதாலோ
விடை பெறும் நேரத்திலும்
உழைக்கும் எம்
பேரிளம் பெண்கள்
அதிகம் உள்ளதாலோ
நீரின்றி போனாலும்
ஆற்றங்கரையில்
ஆளும் குறையாததாலோ.
அண்டை வீடு என்பது
உறவுகள் போலிருப்பதாலோ
என் மதுரை
என் தாய் மடியாகவே
உள்ளது எனக்கு.