Posts

என் அம்மா

 பேசும் வார்த்தை தெளிவில்லை  கேட்கும் திறனும் உதவவில்லை  ஆனாலும்  காலை நேர வானொலி போல மகளின் கைபேசியை  எதிர் நோக்கி  காத்திருக்கும்  தாய். ஓர் வரம் 

பள்ளி பருவம்

 மொட்டவிழ்ந்த  பூக்கள்  மறைத்து வைத்தாலும்  மனம் வீசும் மலர்கள்  தலைமுறை மாற்றங்கள்  இவர்களுக்கு இல்லை. சீருடை கவசமுடுத்தி  புத்தக ஆயுதமேந்தி  அம்பு நடையுடன்  அழகாய்  அமைந்த  அனைவரின்  பள்ளி பருவம் 

சதுரங்க மேடை

 சதுரங்க மேடை  மகா பாரதத்தில்  மட்டுமல்ல  கலியுகத்திலும் தான்  விளையாடுவது அதிகாரத்திற்கு மட்டுமே. தாயாதி சண்டை  இல்லத்திலும் தான். விளையாட நினைப்பவர்கள்  தொடர்ந்து  விளையாடி கொண்டும்  வெட்ட ப் ப டும் காய் கள்  மட்டும் மாறி மாறி. சகுனிகளே பரம்மாத்மாக்களாய்  கீதா உபதேசம்  சங்க நாதமாய்.  வாழ்த்துக்கள் 

ரயில் பயணம்

 இரைச்சல்களின் இடையிலும்  இயங்கி கொண்டிருக்கும்  கடிகாரம் போல்  சுழன்று கொண்டிருக்கும்  தனி உலகம். தடையிலா நடைமேடை  தளிர் நடை போடும்  தளிர்களும் சருகுகளும்  ஷேக்ஸ்பியரின் ஏழு பருவங்களும்  கொண்டாடும் இப்பயணம். பேப்பர் படிக்கும் மனிதர்கள்  பேரிச்சம் பழம் விற்கும் கிழவிகள்  ஓடி விளையாடும் சிறுவர்கள்  இடம் தேடும் அப்பாக்கள்  பொருள் பாதுகாக்கும் அம்மாக்கள்  மனம் சிரித்தாலும் மறந்தும்  சிரிக்காத உதடுகள்  சிலைகளாய் சில உருவங்கள்  மலர்களாய் சில தெய்வங்கள்  மரத்து போன பாறைகள்  அனைத்தையும் சுமந்து  அமைதியாய்  கர்ம யோகியாய்  இயங்கி கொண்டிருக்கிறது  ரயில் நிலையம்.

என் தாய்மடி

பெண்ணாட்சி செய்ததாலோ மருமகனை மன்னனாக்கியதாலோ கடவுள் ஆனாலும் குற்றம்  தட்டி கேட்கப்பட்டதாலோ மன்னன் ஆனாலும்  மனுநீதிச் செய்ததாலோ தூங்காநகரம் ஆனதாலோ   கிராமிய மணம் மாறாததாலோ நித்திய திருவிழா நகரம் ஆனதாலோ விடை பெறும் நேரத்திலும் உழைக்கும் எம்  பேரிளம் பெண்கள்  அதிகம் உள்ளதாலோ நீரின்றி போனாலும் ஆற்றங்கரையில் ஆளும் குறையாததாலோ.  அண்டை வீடு என்பது  உறவுகள் போலிருப்பதாலோ என் மதுரை என் தாய் மடியாகவே உள்ளது எனக்கு. 

பூங்காற்றே எனை தீண்டு

கருவினில் உருவான முதலே          தாயின் சுவாசம் தீண்டிய                        தமிழே!  நாபியில் உயிர் கொண்டதால்           நீயும் நானும் உடன்பிறப்பே. முதல் புலனில்அறிமுகமான           தாயின்  முகம்,  முகவரி கூறியது உந்தன் மூலம்.  கரம் பிடித்து அழைத்துச் சென்ற            தந்தை  கரம் தவழவிட்டுச் சென்ற இடமோ            உந்தன் அகம்.  அறிவு வாசலில் தோரணமாய்             உந்தன்  முகம் அழைத்துச்  சொன்னதோ              அருங்காட்சிப் புத்தகம்.  வடித்தது எம்மொழியாயினும்   படித்தது  உம் வடிவம் மூலம்.  தளிர் நடைபயின்றாலும்   தயங்கித் தான் சென்றாலும் தனித்திருந்த வேளையிலும்   தளர்வுடனே வாழ்ந்தாலும் தோழமையாய்த் தோள் சேர்த்து   தேற்றி எமைத் தாலாட்டி உரமாய் எனை வேர் விட...

Voice of sea

 Walk with white foams Join hands with sunshine Rising water plays a dance,  Wears a blue dress with white frills Throws everything of others,  Self disciplined waves,  Impartial to souls,  Justified waves,  Ohh, tides Where's your wings?  Ohh, sun leaves!  Darkness survives.  Oh! Dear Changed your dress.  Slavish walking Sleepy tides Take rest.  Tomorrow, a day Waiting for you .  So many souls Await for you To clear their sins.  Children's laugh Longs for you.  Oh dear!  Soar your wings  On this earth.  Without you No life there.