ரயில் பயணம்

 இரைச்சல்களின் இடையிலும் 

இயங்கி கொண்டிருக்கும் 

கடிகாரம் போல் 

சுழன்று கொண்டிருக்கும் 

தனி உலகம்.

தடையிலா நடைமேடை 

தளிர் நடை போடும் 

தளிர்களும் சருகுகளும் 

ஷேக்ஸ்பியரின் ஏழு பருவங்களும் 

கொண்டாடும் இப்பயணம்.

பேப்பர் படிக்கும் மனிதர்கள் 

பேரிச்சம் பழம் விற்கும் கிழவிகள் 

ஓடி விளையாடும் சிறுவர்கள் 

இடம் தேடும் அப்பாக்கள் 

பொருள் பாதுகாக்கும் அம்மாக்கள் 

மனம் சிரித்தாலும் மறந்தும் 

சிரிக்காத உதடுகள் 

சிலைகளாய் சில உருவங்கள் 

மலர்களாய் சில தெய்வங்கள் 

மரத்து போன பாறைகள் 

அனைத்தையும் சுமந்து 

அமைதியாய் 

கர்ம யோகியாய் 

இயங்கி கொண்டிருக்கிறது 

ரயில் நிலையம்.



Popular posts from this blog

My Niece

என் அம்மா